Suriya And Jyotika’s ‘Paradise’ Trip To Seychelles | சீஷெல்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற சூர்யா

Suriya And Jyotika’s ‘Paradise’ Trip To Seychelles | சீஷெல்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற சூர்யா


சூர்யா – ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

இதனையடுத்து சூர்யா – ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர காதல் தம்பதிகளான சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சினிமாவைக் கடந்து தனிப்பட்ட வாழ்விலும் இந்த இணை பலருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றனர். குறிப்பாக, சூர்யா ரசிகர்களுக்கு..ரெட்ரோ வெற்றியைத் தொடர்ந்து சூர்யா, வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

.இந்த நிலையில், படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன் சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள சீஷெல்ஸ் நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இருவரும் மகிழ்ச்சியாக பயணம் செய்ததை, “நீயும் நானும் சொர்க்கத்தில்..” என ஜோதிகா வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருவதுடன் வாழ்ந்தால் இவர்களைப்போல் இணை பிரியாமல் வாழ வேண்டும் என தங்கள் விருப்பங்களையும் தெரிவித்து வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *