Sunjay Kapur, Karisma Kapoor’s Ex Husband, Passes Away At 53

இங்கிலாந்து,
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கரீனா கபூரின் சகோதரி கரிஷ்மா கபூர். இவரும் பிரபல நடிகை ஆவார். கரிஷ்மா கபூர் ஒரு தொழில் அதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து சில ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு சமீரா, கியாரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதன் பின்னர் பிரியா சச்தேவ் என்பவரை சஞ்சய் கபூர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அசரியாஸ் என்ற மகன் உள்ளார்.
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் (53) காலமானார். நேற்று இங்கிலாந்தில் போலோ விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகரும் எழுத்தாளருமான சுஹேல் சேத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சஞ்சய் கபூரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து சஞ்சய் கபூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார். இதுவே அவரது கடைசி பதிவாகும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகள் என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை போட்ட சில மணிநேரங்களில் சஞ்சய் கபூருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவர் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.