Student rape case: The culprit should be given maximum punishment – G.V. Prakash | மாணவி வன்கொடுமை விவகாரம்: குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்

Student rape case: The culprit should be given maximum punishment – G.V. Prakash | மாணவி வன்கொடுமை விவகாரம்: குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்


சென்னை,

சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதோடு பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வன்கொடுமை தொடர்பாக நடிகர்கள் மெளனம் காத்து வருகிறார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் “அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் நான் உறுதுணையாக நிற்கிறேன். நம் பெண்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். அவரை போன்றவர்களை வெளியே விடக்கூடாது” என தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறைகளில் முக்கிய பங்கு வகிப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இதுவரை 100 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 25’ படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தமிழில் இடிமுழக்கம், 13, கிங்ஸ்டன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இசையமைப்பாளராக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் எஸ்.கே.25 என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது





admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *