“STR 49” Shooting update | “எஸ்டிஆர் 49” படத்தின் படப்பிடிப்பு அப்டேட்

“STR 49” Shooting update | “எஸ்டிஆர் 49” படத்தின் படப்பிடிப்பு அப்டேட்


சென்னை,

சிலம்பரசன் தக் லைப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இப்படத்திற்கான அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில், நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க வடசென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிப்பதாகத் தெரிகிறது.. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.மேலும், இப்படத்தில் நடிகர் சிம்பு இளம் தோற்றத்தில் நடிப்பதற்காக இரண்டு வாரங்களில் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளாராம்

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலானது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் சிறிய முதுமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து வருவதாகவும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 2-வது வாரம் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *