Sivakarthikeyan with Kerala Chief Minister – recorded as an “unforgettable memory”| கேரள முதல்வருடன் சிவகார்த்திகேயன்

கண்ணூர்,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வரும், இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். மேலும் கண்ணூரில் நடைபெற்ற கலாச்சார விழாவில் கேரள முதல்வருடன் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கண்ணூர், பினராயில் நடைபெற்ற பினராயிபெருமா கலை மற்றும் கலாச்சார விழாவில் அழைப்பின் பேரில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ், சபாநாயகர் ஷம்சீர், அன்புக்குரிய ஆசிப் அலி, மற்றும் பத்திரிகையாளர் ‘தி இந்து’ ராம் அவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. கேரள மக்களின் அன்பும், அரவணைப்பும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்த மறக்க முடியாத நினைவுக்களுக்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.






