Singer ‘Therukkural’ Arivu marriage | காதலியை கரம் பிடித்த பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு!

Singer ‘Therukkural’ Arivu marriage | காதலியை கரம் பிடித்த பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு!


சென்னை,

தென்னிந்தியாவின் பாப் மேர்லி என அழைக்கப்படும் ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, இடஒதுக்கீடு குறித்தும், சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் பாடல்கள் மூலம் மிக அழுத்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வாரந்தோறும் வடசென்னையில் ஒவ்வொரு தெருவில் அங்குள்ள ராப் பாடகர்களை ‘தெருக்குரல்’ ஆல்பம் மூலம் ஒன்றிணைத்து பாடல்களை பாடி வரும் அறிவு, துப்புரவுத் தொழிலாளர்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, சாதி அடிப்படையில் மக்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் எனப் பல பிரச்சினைகளைப் பற்றிய பாடல்களைப் பாட வைத்து வருகிறார்.

ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான காலா திரைப்படத்தில் வரும் உரிமை மீட்போம் என்ற பாடல் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அறிவு. காலாவை தொடர்ந்து வடசென்னை, ஜிப்ஸி உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது பாடல்கள் பல பாராட்டுகளை பெற்றாலும் விமர்சனங்களும் வந்தன.சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் வரும் பருந்தாகுது ஊர் குருவி பாடலை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த அறிவு, தன்னுடைய பாடல் வரிகளில் எப்போதும் சமசரம் செய்துக் கொண்டதில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, ‘சண்ட செய்வோம்’ என்ற பாடலை எழுதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாடி கவனம் பெற்றார். ‘எஞ்சாய் என்சாமி’ பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். சமீபத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலை பாடியிருந்தார்.

இந்நிலையில் இளையராஜா தலைமையில் தெருக்குரல் அறிவு தனது காதலியான கல்பனாவை திருமணம் செய்து கொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இயக்குனர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் அவரது திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.





admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *