Santosh Narayanan joins hands with famous pop singer Ed Sheeran

Santosh Narayanan joins hands with famous pop singer Ed Sheeran


இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் பாடகர் எட் ஷீரன். இவர் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கிறார். இவருடைய முதல் ஆல்பமான ‘பிளஸ்’ மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியான, ஷேப் ஆப் யூ, திங்கிங் அவுட் லவுட், பெர்பெக்ட், ஷிவர்ஸ் போன்றவை இவரை உலக அளவில் பிரபலமாக்கியது.

இவரது ஆல்பம் பாடல்கள் ஒவ்வொன்றும் மில்லியன் கணக்கில் பார்வைகளை பெறக்கூடியவை. இவருடைய ‘ஷேப் ஆப் யூ’ பாடல் மொழிகள் கடந்து சர்வதேச அளவில் கொண்டாப்படுகிறது. அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்த எட் ஷீரன், ‘சப்பையர்’ என்ற பாடலை படமாக்கினார். இந்த பாடலும் பெரும் வைரலானது. இதில் ஷாருக்கான் தோன்றியிருந்தார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் சர்வதேச அளவில் ஒரு கூட்டணி அமைக்கப்போவதாக தெரிவித்திருந்தார். பலரும் அது குறித்து ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர். எட் ஷீரன், ஹனுமான்கைண்ட், தீ, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைய உள்ளதாகவும், இதனை தானே தயாரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டுள்ள ஹனுமான்கைண்ட் என்பவர் கேரளாவைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் ஆவார். இவரது ஆல்பம் பாடல்கள் உலக அளவில் பிரபலமானவை .


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *