”S.J. Surya’s biggest dream is that”- Raghava Lawrence|”எஸ்.ஜே. சூர்யாவின் மிகப்பெரிய கனவு அதுதான்”- ராகவா லாரன்ஸ்

சென்னை,
‘கில்லர்’ படத்தின் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனராக மீண்டும் களமிறங்கிய எஸ்.ஜே. சூர்யாவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து கூறினார்.
எஸ்.ஜே. சூர்யா ‘கில்லர்’ படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், அதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். கதாநாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யாவுக்கு வாழ்த்து கூறி நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பதிவில்,
”எஸ்.ஜே சூர்யா சார், உங்களின் ”கில்லர்” படத்துக்கு வாழ்த்துகள். ஒரு இயக்குனரை விட, ஒரு முன்னணி நடிகராக வேண்டும் என்பதுதான் உங்களின் மிகப்பெரிய கனவு என்று எனக்குத் தெரியும்.
இந்த ”கில்லர்” படம் உங்களுக்கு ஒரு ஹீரோவாக மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும். உங்க கனவுகள் எல்லாம் நனவாக ராகவேந்திர சுவாமியிடம் பிரார்த்திக்கிறேன். முழு படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்