Richard and Nutty reunite after 20 years | 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட்

Richard and Nutty reunite after 20 years | 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட்


பிரியமுடன், யூத், ஜித்தன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘சுப்ரமணி’ திரைப்படத்தில் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நடிகை ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் ஒரு நடிகராக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடித்த திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்கள் அங்கீகாரம் கொடுத்தன. தற்போது ‘திரௌபதி 2’ படத்தில் நடித்து முடித்து விட்ட ரிச்சர்ட் ரிஷி அடுத்ததாக இயக்குனர் வின்சென்ட் செல்வா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் ‘சுப்ரமணி’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருடன் நடிகர் நட்டியும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளராக இருந்த நட்டி நடிகராக மாறியது உதயபானு மகேஸ்வரன் இயக்கிய ‘நாளை’ என்கிற திரைப்படத்தில் தான். இந்த ‘நாளை’ படத்தில் நட்டி, ரிச்சர்ட் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர். அந்த வகையில் 20 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இவர்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் வின்சென்ட் செல்வாவிடம் உதவியாளராக ஒரு காலத்தில் பணியாற்றிய இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன் படப்பிடிப்பின் போது ஒரு இணை இயக்குனராகவும் தனது குருவுக்கு உதவியாக பணியாற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *