Rashmika Mandanna’s ‘Chhaava’ soars to Rs 140 crore at Box Office | 4 நாட்களில் ரூ.140 கோடி

மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘சாவா’. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“சாவா” படம் முதல் நாளில் இந்திய அளவில் மட்டும் ரூ.33.1 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் சுமார் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான பாலிவுட் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது மாறியுள்ளது.
இந்நிலையில் “சாவா” படம் 4 நாட்களில் சுமார் ரூ.140 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இப்படம் விரைவில் ரூ.500 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






