Ranbir Kapoor-Alia Bhatt’s lavish Rs 250 crore bungalow | ரூ.250 கோடியில் வீடு கட்டும் ஆலியா பட்

Ranbir Kapoor-Alia Bhatt’s lavish Rs 250 crore bungalow | ரூ.250 கோடியில் வீடு கட்டும் ஆலியா பட்


மும்பை,

இந்தி சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலியா பட் 2012-இல் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் அறிமுகமானார். கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார். ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.ஹாலிவுட்டில் ஆர்ட் ஆப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவருகிறார் ஆலியா பட். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று ரன்பீர்கபூர்-ஆலியா பட் ஜோடி. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, ராஹா எனும் பெண் குழந்தை உள்ளது. இந்த நட்சத்திர ஜோடி தங்களின் கனவு இல்லத்தை, மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் கட்டி வருகிறது. மிகவும் ஆடம்பரமாக 6 அடுக்கு மாடியாக கட்டப்படும் இந்த வீட்டின் செலவு ரூ.250 கோடி என்கிறார்கள். நம்முடைய கலாசாரத்தைக் காக்கும் வகையிலும், நவநாகரிகத்தை உள்ளடக்கியதாகவும் இந்த வீட்டை ரன்பீர்-ஆலியா ஜோடி கட்டி வருகிறார்கள்.

கட்டிடப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சமீபத்தில் ஆலியா பட் தன்னுடைய மாமியார் நீத்து கபூருடன் இந்த வீட்டை மேற்பார்வை செய்துள்ளார்.இந்த வீட்டிற்கு வெகு விரைவில் கிரகப்பிரவேச நிகழ்வு இருக்கலாம் என்கிறார்கள். அதோடு வீட்டிற்கு ரன்பீர் கபூரின் பாட்டி கிருஷ்ணா ராஜ்கபூர் நினைவாக ‘கிருஷ்ணா ராஜ்’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *