Rakul Preet Singh agrees with ‘comfort zone’ being an ‘enemy’ | பழக்கப்பட்ட சூழல்தான் நமக்கு எதிரி

Rakul Preet Singh agrees with ‘comfort zone’ being an ‘enemy’ | பழக்கப்பட்ட சூழல்தான் நமக்கு எதிரி


சென்னை,

தென் இந்திய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2, அயலான், தேவ், என்ஜிகே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் தேவ்கன் மற்றும் ஆர். மாதவனுடன் ‘தே தே பியார் தே 2’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் “இந்தியன் 3” படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரகுல் பிரீத் சிங் ‘ பழக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியேறுங்கள், சவுகரியமான பழக்கப்பட்ட இடம் உங்களது எதிரி. பழக்கப்பட்ட இடம் அழகாக இருக்கும். ஆனால், அங்கு எதுவுமே வளராது’ என யாரோ சொல்லியிருக்கிறார்கள். மக்கள் சோம்பேறியாக இருக்க முக்கியமான காரணம் அவர்களுக்கு அனைத்துமே நாளைக்கும் வேண்டும் என நினைப்பதுதான். ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சவுகரியமாக இருக்கிறார்கள். ஒரு விஷயம் சென்று கொண்டிருப்பதில் இருந்து எதையும் மாற்ற விரும்புவதில்லை.தினமும் செய்யும் ஒரு விஷயம் உங்களுக்கு எளிமையாக இருக்கலாம். ஆனால், அது உங்களுக்கு எந்த வளர்ச்சியையும் தராது.

வளர்ச்சி வேண்டுமானால் நீங்கள் உங்களது பழக்கப்பட்ட இடத்தை விட்டு வெளியே வர வேண்டும். கடினமான விஷயங்களை செய்ய வேண்டும். என்னுடைய கதாபாத்திரம் அன்டாரா மிகவும் வலிமையான பெண், அதிகமாக தன்னையே நேசிப்பவள். புதியதை விரும்பும் பெண். அதிகமாக விளையாட்டை நேசிக்கும் பெண் இவள்’ என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காதல், நகைச்சுவை திரைப்படம்பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ‘மேரே அஸ்பண்ட் கி பிவி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை முடாசர் அசிஜ் இயக்கியுள்ளார். இது ஒரு முக்கோண காதல் கதையாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது.

நடிகர் ஜாக்கி பாக்னானியை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்தாண்டு பிப்ரவரியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *