Raju’s “Bun Butter Jam” First Day Collection Details

Raju’s “Bun Butter Jam” First Day Collection Details


சென்னை,

ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜு ஜெகன் மோகன். இவர் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெயின் ஆப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. இப்படம் நேற்று வெளியானது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இளசுகள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த படம் வெளியான முதல் நாளிலேயே இந்திய அளவில் ரூ 25 லட்சம் வசூல் செய்து இருக்கிறது. நேற்று வெளியான படங்களிலேயே இந்த படம்தான் அதிக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இரண்டு நாளும் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படத்தினுடைய வசூல் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *