Rajinikanth to release title teaser of “Tourist Family” director’s film

Rajinikanth to release title teaser of “Tourist Family” director’s film


சென்னை,

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில், அபிஷன் ஜீவிந்த் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசரை ரஜினிகாந்த் வெளியிடுகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *