Police register case against famous singer – fans shocked | பிரபல பாடகி மீது போலீசார் வழக்குப்பதிவு

Police register case against famous singer – fans shocked | பிரபல பாடகி மீது போலீசார் வழக்குப்பதிவு


தெலுங்கானா,

தெலுங்கு திரை உலகில் பிரபல பாடகியாக இருப்பவர் மங்லி. இவர் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘ஓ’ சொல்றியா மாமா’ என்ற பாடலை தெலுங்கு மொழியில் பாடியவர். மேலும் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களையும் இவர் பாடி இருக்கிறார்.

இந்நிலையில் இவர் தனது பிறந்தநாளை செவெல்லா மண்டலத்தில் உள்ள பிரபல ரிசார்ட்டில் கொண்டாடினார். விழாவில் அரசியல் மற்றும் திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விருந்தினர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரிசார்ட்டுக்கு விரைந்து சென்று போலீசார் சோதனை நடத்திய போது ஏராளமான கஞ்சா, வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதுடன் விருந்தில் பங்கேற்ற பலரும் கைது செய்யப்பட் டனர்.

கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பாடகி மங்லி போதைப் பொருள் பயன்படுத்தினாரா? இல்லையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,

போதைப் பொருள் பின்னணியில் உள்ள கும்பலை பிடிப்பதற்கு போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் பாடகி மங்லியின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *