Parasakthi Second Single Ratnamala is Out |“பராசக்தி” படத்தின் “ரத்னமாலா” பாடல் வெளியானது

சென்னை,
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. முதல் பாடலான ‘அடி அலையே’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
‘பராசக்தி’ படத்தின் 2வது பாடல் என்னுடைய சினிமா கெரியரில் சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும் என்று ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் 2-வது பாடலான ‘ரத்னமாலா’ வெளியாகியுள்ளது. இப்பாடலை ஜெயஸ்ரீ மதிமாறன் வரிகளில் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.






