No one is a competitor – Actor Soori | யாருக்கும் யாரும் போட்டி கிடையாது

No one is a competitor – Actor Soori | யாருக்கும் யாரும் போட்டி கிடையாது


தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் சமீபத்தில் ‘மாமன்’ படம் வெளியானது. பிரசாந்த் பண்டிராஜ் இயக்கியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படமாக ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் நடிகர் சுஹால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மீனவர்களின் படகு ரேஸை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனா? என்பது குறித்து பேசிய சூரி, “யாருக்கும் யாரும் போட்டி கிடையாது. விஜய் அண்ணன், விஜய் அண்ணன்தான். எஸ்கே தம்பி, எஸ்கே தம்பிதான். எல்லோருக்கும் மக்கள் ஆதரவு உள்ளது. விஜய் அண்ணன் உச்சத்தில் உள்ளார். தம்பி சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார்

யாருக்கும் யாரும் போட்டியாளர்கள் இல்லை. தங்களது வேலையை திறம்பட செய்தாலே எல்லாம் சரியாக இருக்கும். இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது. நான் எனது முழு உழைப்பை அதில் போட்டுள்ளேன். மீனவர்கள் குறித்து பேசும் இதுபோன்ற கதையை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் விரைவில் வெளியாகும். அதேபோல இயக்குநர் ராம் உடன் ஒரு படம் தயாராகி கொண்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *