“Nee Singamthan” – a post released by actor Sanjeev in support of Vijay | “நீ சிங்கம்தான்”

சென்னை,
கரூரில் விஜய்யின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக தற்போது அதிகரித்து இருக்கிறது.உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக விஜய் அறிவித்து இருக்கிறார். மேலும் கரூருக்கு நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல அனுமதி கேட்டிருக்கிறார் விஜய்.
போலீஸ் பாதுகாப்பு அனுமதி தர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. மேலும் கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக விஜய்யை தாக்கி பலரும் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் அவருக்கு எதிராக அரசியல் நடப்பதாக அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் சம்பவத்தால் விஜய் கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக அவரது நண்பரும் நடிகருமான சஞ்சீவ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம்தான்” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.