National Award for Best Supporting Actor – Actor M.S. Bhaskar | சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது

National Award for Best Supporting Actor – Actor M.S. Bhaskar | சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது



சென்னை,

இந்தியாவின் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், 2023ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதுக்கு பார்கிங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்வுக்கான போட்டியில் 332 படங்கள் இடம்பெற்றன.

இந்த சூழலில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ஆகிய 3 பிரிவுகளில் பார்க்கிங் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.

‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ள எம்.எஸ்.பாஸ்கர் கூறியதாவது:-

இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு என்பேன். ஏனெனில் நான் நடித்ததில் என்னை ஈர்த்த படங்களில் ‘பார்க்கிங்’ மிகவும் முக்கியமான படம். ஒரு சாதாரண சண்டை எந்தளவு செல்லும் என்பது அப்படத்தில் காட்டப்பட்டிருந்தது.

எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் என் நடிப்புக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை தந்தனர். இப்போது தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.

விருதால் மகிழ்ந்து போயுள்ளேன். நெஞ்சம் நெகிழ்ந்தும் போயிருக்கிறேன். இதை என் வாழ்நாளில் முக்கியமான நாளாக கருதுவேன்.

இந்த விருது எனக்கு கிடைக்க காரணமாக இருந்த பார்க்கிங் படக்குழுவுக்கும், ரசிகர்களுக்கும், என் பயணத்தில் துணை நின்ற அத்தனை பேருக்கும், குடும்பத்தினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *