Nandamuri Balakrishna Driving Bus At Hindupur

தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் நடித்த ‘பகவந்த் கேசரி’ படத்துக்காக அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சினிமாவில் நடித்து வரும் பாலகிருஷ்ணா மறுபுறம் ஆந்திராவின் இந்துபூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்டவர் 3வது முறையாக தற்போது எம்.எல்.ஏ.வாக திகழ்கிறார்.
இந்நிலையில், ஆந்திராவில் ஸ்ரீசக்தி திட்டம் என்ற பெயரில் மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து இந்துப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பாலகிருஷ்ணா பேருந்தை இயக்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பாலகிருஷ்ணாவே நேரடியாக களமிறங்கி பேருந்தை ஓட்டிச் சென்றார்.
அவர் ஓட்டுவதைப்பார்த்த மக்கள் பீதியில் தான் இருந்தனர். ஆனாலும், தன்னுடைய வழக்கமான அதகளத்தால்ப பேருந்து ஓட்டி அசத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணா நடிப்பில் அண்மையில் ‘டாக்கு மகாராஜ்’ திரைப்படம் வெளியானது. ரூ.130 கோடி வரை வசூலித்தது.