Mohan Babu’s son starring “Mirai” trailer praises Rajinikanth

Mohan Babu’s son starring “Mirai” trailer praises Rajinikanth


நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான ‘மிராய்’ தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் இணையத்தில் கவனம் பெற்றது. இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும்.

கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். படம் திட்டமிட்டபடி வரும் 5-ம் தேதி பல மொழிகளில் வெளியாகிறது. ‘மிராய்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. படத்தில் இடம் பெற்ற ஆக்சன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிக நன்றாக உருவாக்கியுள்ளனர். படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மஞ்சு மனோஜ், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் இளைய மகன். ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன்பாபு . மஞ்சு மனோஜ் நடித்துள்ள ‘மிராய்’ படத்தின் டிரெய்லரை பார்த்து ரஜினி பாராட்டியுள்ளார்.

இது குறித்து மஞ்சு மனோஜ் எக்ஸ் தளத்தில், “மிராய் டிரெய்லரை பார்த்து எங்களை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு மனமார்ந்த நன்றி. அன்பு சகோதரர் சிவகார்த்திகேயனின் மதராசி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழக மக்களுக்கும், ஊடக நன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *