Mari Selvaraj posts a post thanking the Chief Minister for praising the film “Bison”

Mari Selvaraj posts a post thanking the Chief Minister for praising the film “Bison”


சென்னை,

பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன், வாழை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது.

பைசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இயக்குநர் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாக பைசன் திரைப்படம் அமைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவை பகிர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பதிவில், “என் முதல் படமான பரியேறும் பெருமாளில் ஆரம்பித்து கர்ணன் மாமன்னன் வாழை இப்போது பைசன் வரை என் மீதும் என் படைப்பின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்து ஆர்வமாய் பார்த்து நேரில் அழைத்து என்னை உச்சிமுகர்ந்து கொண்டாடும் உங்களின் அத்தனை பேரன்பிற்கும் பெரும் பிரியத்திற்கும் என் இதயத்திலிருந்து கசிந்துருகும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா” என்று தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *