Mammootty on Mohanlal’s Dadasaheb Phalke Award

சென்னை,
இந்தியாவின் மிக உயர்ந்த திரைப்பட விருதான தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்காக மோகன்லாலுக்கு மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, பிரபல நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு அவர் அளித்த சிறப்பான பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. வருகிற 23 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு இந்த விருது வழங்கப்படும்.
இதனையடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்தவகையில், பிரதமர் மோடி சமீபத்தில் வாழ்த்து கூறி இருந்தநிலையில், தற்போது நடிகர் மம்முட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
மோகன்லாலை நினைத்து மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகவும், உண்மையிலேயே இந்த விருதுக்கு அவர் தகுதியானவர் எனவும் தெரிவித்திருக்கிறார்.