Mammootty – Mohanlal Movie Teaser Release Date Announcement | மம்முட்டி

மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்முட்டி 74 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பசூகா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது. தற்போது, களம் காவல் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அடுத்ததாக, மோகன்லாலுடன் பேட்ரியாட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு புற்றுநோய் பாதித்ததாக வதந்திகள் பரவின. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. வழக்கமாக, ஒன்றிரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் மம்முட்டி , கடந்த சில மாதங்களுக்கும் ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார். நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதாராபாத் புறப்பட்டு சென்றார்.
இதனை தொடர்ந்து நடிகர் மம்முட்டி தனதுபேஸ்புக் பதிவில், “சிறிய இடைவெளிக்குப் பிறகு, நான் என் வாழ்க்கையில் மிகவும் விரும்பியதைச் செய்யத் திரும்பியுள்ளேன். கேமரா அழைக்கிறது!” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மம்முட்டியின் பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘MMMN’ என்று தெரிவித்துள்ள படக்குழு டீசர் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மோகன்லாலுக்கு துடரும், ஹிருதயப்பூர்வம் ஆகிய படங்கள் வெற்றிப்படமாக அமைந்தன.தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து ‘டேக் ஆப்’, ‘மாலிக்’ படங்களின் மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடித்து வருகின்றனர்.