Maha Kumbh’s viral girl Monalisa is now making her Bollywood debut

Maha Kumbh’s viral girl Monalisa is now making her Bollywood debut


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

பின்னர் செல்பி தொந்தரவு தாங்கமுடியாமல் கும்பமேளாவிலிருந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் மோனலிசா. அதன்பிறகு சமூக வலைதளங்களில் பிரபலமாக மாறிவிட்டார். யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் பக்கம் என இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு பாலிவுட்டிலும் நுழைவீர்களா என்று கேட்டதற்கு, வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று குறிப்பிட்டு இருந்தார். சனோஜ் மிஸ்ரா இதற்கு முன்பு ராம் கி ஜன்மபூமி உட்பட ஏராளமான படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது ‘டைரி ஆப் மணிப்பூர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிக்க மோனலிசாவிற்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் விரைவில் பாலிவுட் ஹீரோயினாகவும் அறிமுகமாக உள்ளார் மோனாலிசா. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது புதிய படத்தில் மோனலிசாவை நாயகியாக நடிக்கவைக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இதற்காக மோனலிசாவின் கிராமத்துக்கு சென்று அவரை சந்தித்துள்ளார் சனோஜ். இப்படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவின் சகோதரர் அமித் ராவ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *