“Kudumbasthan” completes one year – Actress thrilled with the response to the film | ஓராண்டை நிறைவு செய்த “குடும்பஸ்தன்”

“Kudumbasthan” completes one year – Actress thrilled with the response to the film | ஓராண்டை நிறைவு செய்த “குடும்பஸ்தன்”


தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம், லவ்வர், குட் நைட்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.

மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் 75வது நாளை கடந்து வெற்றி பெற்றது. இப்படம் உலக அளவில் சுமார் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இப்படம் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. நடிகை சான்வி மேக்னா தனது எக்ஸ் பக்கத்தில் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.அதில் “நான் 2016 முதல் நடித்த எல்லா படங்களுக்கும் பாராட்டுகள் கிடைத்தாலும், நான் எதிர்பார்த்த ஒன்று ‘குடும்பஸ்தன்’ மூலமே கிடைத்தது. எனது முதல் பிளாக்பஸ்டர் அது. இப்படத்தின் மூலம் மக்களிடம் கிடைத்த அன்பும், மரியாதையும் ஸ்பெஷலானது. இதற்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சான்வி மேக்னா, பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *