Kriti Sanon, Dhanush celebrate Holi on sets of ‘Tere Ishk Mein’| படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய தனுஷ்

Kriti Sanon, Dhanush celebrate Holi on sets of ‘Tere Ishk Mein’| படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய தனுஷ்


தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் அவ்வப்போது இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். தனுஷ் தற்போது நடித்து வரும் இந்திப் படம் ‘தேரே இஷ்க் மெய்ன்’. ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படமானது வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ராஞ்சனா, அத்ராங்கி ரே’ படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இப்படத்தை இயக்கி வருகிறார். கிரித்தி சனோன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஹோலி கொண்டாட்டத்தை இயக்குனர் ஆனந்த், தனுஷ், கிரித்தி சனோன் ஆகியோர் இணைந்து கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கிரித்தி, “லைட்ஸ், மேகரா, ஹோலி… நிறங்கள் குறைந்தாலும் காதல் அதிகம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பல இந்தி நடிகர்கள், நடிகைகள் அவர்களது ஹோலி கொண்டாட்டப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *