Keerthy Suresh’s film Title teaser Out

நடிகை கீர்த்தி சுரேஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு, மீண்டும் முழு வீச்சில் நடிக்கத் தொடங்கியுள்ளார். பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.இப்போது தமிழ் ,தெலுங்கு, இந்தி, மற்றும் மலையாளம் ஆகிய துறைகளில் இருந்து வாய்ப்புகள் குவிவதால் அவர் எப்போதும் இல்லாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.
கீர்த்தி ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிக்கும் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் “ரவுடி ஜனார்தன்” படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார். கூடுதலாக, அவர் ஒரு தமிழ் படத்திலும் மற்றொரு பாலிவுட் படத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மலையாளத்தில் மீண்டும் கால்பதிக்கும் கீர்த்தி சுரேஷ் ‘தோட்டம்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் நாயகனாக ஆண்டனி வர்கீஸும் நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தினை ரிஷி சிவக்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. பிர்ஸ்ட் பேஜ் என்டர்டெயின்மென்ட், ஏவிஏ புரடக்ஷன்ஸ், மார்கா என்டர்டெயினர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகவிருக்கிறது. கீர்த்தி சுரேஷ் மிகவும் பிஸியாக இருப்பதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறிப்பிடப்படவில்லை.






