Jayam Ravi Enjoys India-Pakistan Match With Girlfriend Kenisha In Dubai | இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவிமோகன்

Jayam Ravi Enjoys India-Pakistan Match With Girlfriend Kenisha In Dubai | இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவிமோகன்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களை தயாரிக்க உள்ளார். அதில், முதல் படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் அவரே நடிக்க உள்ளார். இரண்டாவதாக யோகி பாபுவை வைத்து ஒரு படம் இயக்கி தயாரிக்கிறார்.

நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளார். இது குறித்து கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இருவரது பிரிவிற்கும் பாடகி கெனிஷாதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதின. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியை நடிகர் ரவி மோகன், பாடகி கெனீஷா ஆகியோர் துபாயில் கண்டுகளித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை ரவி மோகன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *