It is very difficult to write beautiful female characters in Tamil – Aswath Marimuthu | தமிழில் அழகான பெண் கதாபாத்திரங்களை எழுதுவது மிகவும் கடினம்

சென்னை,
கடந்த 2020ம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் ‘ஓ மை கடவுளே’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இந்த படத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டிராகன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியானது. இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, “தமிழில் அழகான பெண் கதாபாத்திரங்களை எழுதுவது மிகவும் கடினம். இதுவரை நான் எழுதிய இரண்டு அழகான பெண் கதாபாத்திரங்களில் ஒன்று ஓ மை கடவுளே படத்தின் அனு (நூடுல்ஸ் மண்ட), மற்றொன்று டிராகன் படத்தில் வரும் பல்லவி. எனக்கு பிடித்த இரண்டு பெண் கதாபாத்திரங்களும் உயர்ந்த நிலையில் இருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.