In 6 days Rs. 50 crore – Vijay Sethupathi’s “Thalaivan Thalaivi” in collection hunt | 6 நாட்களில் ரூ. 50 கோடி

சென்னை,
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து ‘பொட்டல முட்டாயே’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் சேதுபதி – பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. கணவன் – மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படத்தை ஆகஸ்ட் 1ம் தேதி தெலுங்கில் வெளியானது.
இந்நிலையில், ‘தலைவன் தலைவி’ திரைப்படம் முதல் 6 நாள்களில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.