Iman’s post on the 13th anniversary of the release of “Kumki”

Iman’s post on the 13th anniversary of the release of “Kumki”


சென்னை,

நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’என்ற திரைப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் முக்கிய பங்காற்றியது கொம்பன் யானையும், கும்கி யானையும்தான். தம்பி ராமையாவின் காமெடி, இமானின் பின்னணி இசை, பாடல்களும் படத்தை தூக்கி நிறுத்தியது. தற்போது ‘கும்கி 2’ திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது..

‘கும்கி’ படம் தற்போது 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “கும்கியின் 13 ஆண்டுகள். இப்போதும் இந்தப் படத்தின் ‘ஒன்னும் புரியல’ பாடலைக் கேட்பது மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகிறது. சமீபத்தில் கோயம்புத்தூரில் துணிக்கடைக்குச் சென்றிருந்தேன். அங்கு பணிபுரியும் ஊழியர்களும் பொதுமக்களும் இந்தப் பாடலை பாட வேண்டுமென அன்புடன் கேட்டார்கள். அவர்கள் கேட்டதை தவிர்க்க முடியவில்லை. இந்த மாதிரியான தருணங்கள்தான் இசை என்பது எவ்வளவு ஆசீர்வாதம் என்பது நினைவூட்டுகிறது. கடவுளுக்கு நன்றி” என கூறியுள்ளார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *