If you don’t do this, you can escape criticism – Sai Abhayanka | இதில் இல்லாம இருந்தாலே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம்

சாய் அபயங்கர், ”கட்சி சேரா”, ”ஆச கூட” போன்ற பாடல்கள் மூலம் புகழ் பெற்றார். இந்த பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ”கருப்பு”, ‘டியூட்’, ‘பல்டி’, ‘எஸ்டிஆர் 49’, பென்ஸ், சிவகார்த்திகேயன் – ’குட் நைட்’ விநாயக் இணையும் படம் என அடுத்தடுத்த வாய்ப்புகள் சாய் அபயங்கருக்கு குவிந்தன. பிரமாண்ட பட்ஜெட்டில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்துக்கும் சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஷான் நிகாம் நடித்துள்ள ”பல்டி” படத்தின் மூலம் சாய் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் ‘டியூட்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் விமர்சனங்கள் குறித்து கேள்விக்கு சாய் அபயங்கர், “நான் டுவிட்டர்லையும், இன்ஸ்டாலையும் பெருசா இல்ல. அப்படி அதுல இல்லாம இருந்தாலே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம். நான் அதிகமா ஸ்டூடியோல தான் இருப்பேன். எனக்கு பெருசா வெளியலாம் போகப் புடிக்காது. மியூசிக் பண்ணத்தான் புடிக்கும். எனக்கு புடிச்ச மியூசிக்க பண்றேன். மக்களும் அதற்கு சப்போர்ட் பண்றாங்க” என்று கூறியுள்ளார்.