If I get a chance, I will direct Ajith’s film – director Magizh Thirumeni | வாய்ப்பு கிடைத்தால் அஜித் படத்தை இயக்குவேன்

If I get a chance, I will direct Ajith’s film – director Magizh Thirumeni | வாய்ப்பு கிடைத்தால் அஜித் படத்தை இயக்குவேன்


சென்னை,

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் “தடையறத் தாக்க”. இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர்நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். 2012-ல் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இயக்குனர் மகிழ் திருமேனிக்கு இந்தப் படம் முக்கிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. வாழ்க்கையில் கஷ்டபட்டு ஒரு நல்ல நிலைக்கு முன்னேறிய இளைஞன், ஒரு சிறு உதவி செய்யபோக, மிகப்பெரிய ரவுடிகளின் கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறான். அவன் அந்த ரவுடிகளிடமிருந்து தப்பினானா என்பது தான் இந்தப் படத்தின் கதை.

திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இப்படம் நேற்று ரீ- ரிலீஸானது. அருண் விஜய்க்கும் திருப்புமுனை படமாக அமைந்ததுடன் இன்றுவரை மகிழ் திருமேனியின் சிறந்த படமாகவும் பார்க்கப்படுகிறது.அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கியிருந்தார். அந்தப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து பேசியதாவது”‘தடையறத் தாக்க’ படத்தினை திரையரங்கில் பார்த்தவர்களுடன் இணையத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்தோமானால் இந்தப்படம் அந்தாண்டு வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியிருக்கும். ஒரு படம் வெற்றிப் படமா இல்லையா என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். ஆனால், ஒரு படம் நல்ல படமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்றார். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அஜித் படத்தை இயக்குவேன்” என கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *