If doing good is politics, then I am a politician – Vishal | நல்லது செய்வது அரசியல் என்றால் நான் அரசியல்வாதிதான்

உதகை அருகே விஷால் நடிக்கும் ‘மகுடம்’ படபிடிப்பு நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை செலுத்தினார். பின்னர் படபிடிப்பு தளத்திற்கு வந்த அனைவருக்கும் தனது கையால் மதிய உணவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறுகையில், “கேப்டன் விஜயகாந்த் மறக்க முடியாத மனிதர். நடிகர், அரசியல்வாதி அவர் எந்த துறைக்கு சென்றாலும் முன்னுதாரணமாக இருந்தவர். நாம் இப்போது சினிமா சூட்டிங் தளத்தில் சாப்பிட முக்கிய காரணம் விஜயகாந்த் தான். அவர் சாப்பிடுவதையே அனைவரும் சப்பிட வேண்டும் என்பார். பசியோடு வந்தவர்களை பசியாற வைத்து தான் அனுப்புவார். அது தான் எனக்கு தூண்டுதலாக இருந்தது.
விஜயகாந்த் வழியில் உணவு அளிக்க வேண்டும் என்பது ஆசை. இன்று விஜயகாந்த் இல்லை என்றாலும் கொண்டாட கூடிய மனிதராக உள்ளார். இன்றைய அரசியலில் விஜயகாந்த் இருந்திருந்தால் 2026 அரசியல் களம் வேறுமாதிரி இருந்திருக்கும். நடிகர் சங்க கட்டிடடம் கட்ட வேண்டும் என்ற விஜயகாந்தின் கனவு இன்னும் 2 மாதங்களில் பணிகள் முடிந்து நனவாகும். நடிகர் சங்க கட்டிடம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் திறப்பு விழாவிற்கு தயாராகி விடும். சினிமாவை பொறுத்தவரை ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். சூதாட்டத்திற்கும் சினிமவிற்கும் ஒரே மாதிரி வரி விதிப்பதில் மாற்றம் கொண்டுவரவேண்டும். தற்போது தமிழக அரசு 5 கோடியில் திறந்து வைத்துள்ள படப்பிடிப்பு தளம் வரவேற்கத்தக்கது.
விஜய் அரசியலுக்கு வந்து இரண்டாவது மாநாட்டை கோலாகலமாக நடத்தியதற்கு வாழ்த்துகள். புதிதாக அரசியலுக்கு வருவோரை வாழ்த்த வேண்டும். சமூக சேவை செய்ய மற்றொரு கட்சி வருகிறது. இந்த 2026-ஆண்டு தேர்தலில் நிறைவேற்றபடாமல் உள்ள பல்வேறு திட்டங்களை வாக்குறுதியாக கொடுத்து செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும். நல்லது செய்வது தான் அரசியல் என்றால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். நடிகர் சங்க கட்டிடம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஓரிரு மாதத்தில் திறப்பு விழா நடத்தப்படும்” என்றார்.