“Idli Kadai” is a film that stays in the mind even after a long time – Selvaraghavan | “இட்லி கடை” நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் படம்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படம் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளனர். ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர் தயாரித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘இட்லி கடை’ படம் 10 நாட்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்த தனுஷ்க்கு அவரின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் “இட்லி கடை ! நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர். நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என இப்பொழுதுதான் புரிகின்றது. வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி” என பதிவிட்டுள்ளார்.