I will no longer post emojis about new movies on X page – Anirudh | இனி எக்ஸ் பக்கத்தில் புதிய திரைப்படங்கள் குறித்து இமோஜிகளை பதிவிடமாட்டேன்

I will no longer post emojis about new movies on X page – Anirudh | இனி எக்ஸ் பக்கத்தில் புதிய திரைப்படங்கள் குறித்து இமோஜிகளை பதிவிடமாட்டேன்


சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

‘கூலி’ படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன. ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘கூலி’ படத்தின் டிரெய்லர் வைரலாகி வருகிறது.

வழக்கமாக அனிருத் இசையமைக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்பு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பயர் எமோஜி போடுவது வழக்கம். அப்படியென்றால் அப்படம் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுவார்கள். ஆனால் அண்மைக்காலங்களில் அவர் இசையமைத்து வெளியான படங்களுக்கு அனிருத் பயர் எமோஜி போடாதது பேசுபொருளானது.

இந்நிலையில், கூலி படம் தொடர்பாக பேட்டி அளித்த அனிருத், “நான் பயர் எமோஜி போடுவதை நிறுத்திவிட்டேன். பல படங்கள் நன்றாக இல்லை என்று எனக்குத் தெரியும், தெரிந்தும் எமோஜி போட்டால் அது தவறாகிவிடும். ஜெயிலர் படத்தை பொறுத்தவரை நான் நன்றாக இருப்பதாக நினைத்து பயர் எமோஜி பதிவிட்டேன். ஆனால் எல்லா படங்களுக்கும் அப்படி போடுவது எனக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால் கூலி படம் சூப்பராக வந்துள்ளது. நான் இங்கே பயர் எமோஜியைக் கொடுக்கிறேன்” என்று தெரிவித்தார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *