I will definitely be back this year – Actor Jayam Ravi | நான் கண்டிப்பாக இந்த ஆண்டு மீண்டு வருவேன்

I will definitely be back this year – Actor Jayam Ravi | நான் கண்டிப்பாக இந்த ஆண்டு மீண்டு வருவேன்


சென்னை,

‘பிரதர்’ படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். “வணக்கம் சென்னை” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. அதிலும் 3-வது பாடலான ‘பிரேக் அப் டா’ பாடல் வைரலாகி வருகிறது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தபாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தின் புரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெயம் ரவி, “மிக அழகான மேடை. இவர்களுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அழகை மிக அழகாகப் படம்பிடித்துள்ளார் இயக்குநர். டைட்டிலே அட்டகாசமாக இருந்தது. கிளாசிக் பட டைட்டில் கிடைத்தது மகிழ்ச்சி. படத்தில் நித்யா மெனன் பெயருக்குப் பின் ஏன் உங்கள் பெயர் எனக் கேட்டார்கள்; என் மீதான நம்பிக்கைதான். திரை வாழ்க்கையில் நிறைய விஷயங்களை உடைத்துள்ளேன். இது மட்டும் ஏன் கூடாது?. நடிகர் ஷாருக்கானை பார்த்துத்தான் இந்த முடிவை எடுத்தேன். பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை. அவர்கள் இல்லாமல் நாம் இல்லை, இனி பெண் இயக்குநர்கள் படத்தில் இதை பின்தொடர்வேன். எனக்கு மிக கஷ்டமான காலம் இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் நான் நடித்த படங்கள் ஓடவில்லை, நான் என்ன தவறு செய்தேன்? என யோசித்தேன். என் மீது தவறு இல்லாதபோது ஏன் துவண்டு போக வேண்டும் எனத் தோன்றியது.ஆனால் அடுத்த ஆண்டு 2015 இல் ரோமியோ ஜூலியட், பூலோகம், தனி ஒருவன் என மூன்று ஹிட் படங்களை கொடுத்தேன். ஒருவர் தோற்றுப் போய் துவண்டு கீழே விழுந்து விட்டால் அதைத் தோல்வி என்று சொல்கிறோம். அவர் திருப்பி எந்திரிக்காமல் இருந்தால் அது தான் தோல்வி. திருப்பி எந்திரிச்சா அவருக்கு தோல்வியே கிடையாது

நான் கண்டிப்பாக இந்த ஆண்டு மீண்டு வருவேன். அடுத்தடுத்து மிக நல்ல வரிசையில் படம் செய்து வருகிறேன். இயக்குநர் பாலச்சந்தர் தன்னுடைய படங்களில் பல விஷயங்களை சர்வசாதாரணமாக உடைத்திருப்பார். அதேபோல், ஜென் ஜி தலைமுறையில் இயக்குநர் கிருத்திகா அதைச் செய்துள்ளார்.” எனத் தெரிவித்தார்

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் வரும் 14 ம் தேதி வெளியாகிறது.





admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *