I directed the film ‘Gandhara Chapter 1’ by divine guidance – Rishabh Shetty | தெய்வீக தலை​யீட்​டால் ‘காந்​தா​ரா சாப்​டர் 1’ படத்தை இயக்​கினேன்

I directed the film ‘Gandhara Chapter 1’ by divine guidance – Rishabh Shetty | தெய்வீக தலை​யீட்​டால் ‘காந்​தா​ரா சாப்​டர் 1’ படத்தை இயக்​கினேன்


ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ படம் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஆங்கிலத்தில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் பெறுகிறது . தற்போது ஆங்கிலத்திலும் வெளியானதால் விரைவில் ரூ.1,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘காந்தாரா சாப்டர் 1’ படம் குறித்து ரிஷப் ஷெட்டி “இதுபோன்ற கதையை வெறும் பணத்​துக்​காக மட்​டும் செய்​து​விட முடி​யாது. நான் வேறு கதைகளைத் தேர்வு செய்​திருந்​தால் ரிஸ்க் எடுப்​ப​தைத் தவிர்த்​திருப்​பேன். ‘காந்​தா​ரா’வை மொழி மற்​றும் கலாச்​சார வேறு​பாடு​களைக் கடந்து பார்​வை​யாளர்​கள் அதி​கம் பேசி​ய​போது, இந்​தக் கதையை நியா​யத்​துடன் முடிக்க வேண்​டும் என்று நினைத்​தேன். ‘காந்​தா​ரா’​வின் முன் கதையைச் சொல்​வதன் மூலம் அந்​தப் படத்​துக்கு நியா​யம் செய்ய முடி​யும் என்று நம்​பினேன். பின்​னர் தெய்வீக தலை​யீட்​டால் ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்தை இயக்​கினேன்.

உண்​மை​யைச் சொன்​னால், ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்தை முடிக்​கும் வரை வேறு பணி​களில் கவனம் செலுத்த வேண்​டாம் என்று நினைத்​தேன். அப்​போது ‘ஜெய் ஹனு​மான்’ வாய்ப்பு வந்​த​தால் ஏற்றுக் கொண்​டேன். அந்​தக் கதை என்னை விரட்​டிக் கொண்டு வந்​தது. மறுக்க முடிய​வில்​லை. புராணங்கள், வரலாற்​றுப் பின்​னணி கதைகள் மீது எனக்கு ஆர்​வம் இருப்​ப​தால் ஒப்​புக் கொண்​டேன். ஒரு நடிக​ராகவோ அல்​லது இயக்​குந​ராகவோ ஒரே பாணி​யில் ஒட்​டிக்​கொண்​டிருக்க முடி​யாது. மாறு​பட்ட கதா​பாத்​திரங்​களில் நடிக்க வேண்​டும்​ என நினைக்​கிறேன்​” என்​றார்​.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *