I am a tireless worker – Actress Malavika Mohanan | ஓய்வின்றி உழைப்பவள் நான்

‘பட்டம் போலே’ என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார். தற்போது, இவரது நடிப்பில் வெளியான ‘ஹிருதயபூர்வம்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், தமிழில் ‘சர்தார் 2’, தெலுங்கில் ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மாளவிகா மோகனன், தற்போது பிரபாஸ் ஜோடியாக நடித்த ‘தி ராஜாசாப்’ திரைப்படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாக உள்ளது. இதன் மூலமாக தெலுங்கு சினிமாவில் விரைவில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார். இதற்கிடையில் சினிமாவின் தான் ஓய்வின்றி உழைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் “சினிமா என் விருப்பமான ஒன்றுதான். ஆனாலும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள கூட முடியாமல், ஒருநாள் கூட விடுமுறை எடுக்க முடியாமல் 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைத்து வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ‘அப்படி என்றால் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது தானே…’ என்று ரசிகர்கள் பதில் அனுப்ப, ‘அது முடியாதே…’ என்று சிரித்தபடி பதில் அளித்துள்ளார்.