Hiphop Aadi gives an update on the new film

Hiphop Aadi gives an update on the new film


சென்னை,

தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத் துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார்.மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் இசையமைத்த, ‘டக்கர்’ என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘கடைசி உலகப்போர்’ படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி வெளியானது. இப்படத்தில் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்குவதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு இசையும் அமைத்திருந்தார்.

இந்த நிலையில், ‘கடைசி உலகப்போர்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டு உள்ளார். அடுத்த படத்தின் அப்டேட்டை விரைவில் வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘கடைசி உலகப்போர்’ படம் குறித்து ஹிப்ஹாப் ஆதி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “கடைசி உலகப்போர்’ படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. சில சமயங்களில் நாம் சாத்தியமற்றது என்று நினைத்த விஷயங்கள் ஒரு படி தூரத்தில்தான் இருக்கும். இந்தப் படம் எனக்கு நிறைய அனுபவங்களைத் தந்துள்ளது. இது எப்போதும் எனக்கு ஒரு சிறப்புப் படமாக இருக்கும். மிகவும் உற்சாகமான ஒன்றுக்குத் தயாராகி வருகிறேன். விரைவில் அறிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *