Harish Kalyan met and greeted Kamal

சென்னை,
71-வது தேசிய திரைப்பட விருதுக்கு சிறந்த திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். 2023ம் ஆண்டு வெளியான ‘பார்க்கிங்’ படத்தில் நடித்திருந்த எம்.எஸ். பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளார். இப்படம் சிறந்த தமிழ் படத்துக்கான விருதுடன், சிறந்த திரைக் கதைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளது.
திரில்லர் டிராமாவான இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வாடகை வீட்டில் இருக்கும் ஒருவருக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையில் காரை பார்க் செய்வது தொடர்பாக எழும் மோதல்களே படத்தின் கதை.
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்களுக்கு நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் வாழ்த்து கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது. சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமார், சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற தோழி ஊர்வசி, சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக'” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ‘பார்க்கிங்’ படம் தேசிய விருது வென்றதையொட்டி கமலை ஹரிஷ் கல்யாண் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுதொடர்பாக ஹரிஷ் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ஒரு நண்பன் போல பேசினீர்கள். எம்எஸ் பாஸ்கர் உடனான உங்கள் நட்பை பற்றி பேசினீர்கள். உரையாடலா? யூனிவர்சிட்டி பாடமா? கற்றது பல.. கற்க வேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தை படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது” என்று குறிப்பிட்டுள்ளார்.