“Geetha Govindam” is always a great film – Rashmika Mandanna | “கீதா கோவிந்தம்” எப்போதுமே சிறப்பான படம்தான்

கடந்த 2018ம் ஆண்டு பிளாக்பஸ்டரான ‘கீதா கோவிந்தம்’ படத்தில் முதன்முதலில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருந்தனர். அதன்பின்னர், 2019ம் ஆண்டு வெளியான ‘டியர் காம்ரேட்’ திரைப்படத்தில் இருவரும் நடித்தனர். நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் இந்தப் படத்தில் இருந்துதான் காதலித்ததாக நம்பப்படுகிறது. இருவருமே இது குறித்து அதிகாரபூர்வமாக இதை அறிவிக்காத நிலையில், விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘கீதா கோவிந்தம்’ படத்தின் 7-வது ஆண்டை முன்னிட்டு நடிகை ரஷ்மிகா புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ரஷ்மிகா தனது இன்ஸ்டா பதிவில் “7 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் புகைப்படங்களை வைத்துள்ளேன் என்பதை நம்பவே முடியவில்லை. ‘கீதா கோவிந்தம்’ எப்போதுமே சிறப்பான படம்தான். இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைத்து பார்க்கிறேன். நாங்கள் எல்லாம் சந்தித்து நீண்டநாள்கள் ஆகின்றன. ஆனால், அனைவரும் நன்றாக இருப்பார்கள் என நினைக்கிறேன். 7 ஆண்டுகள் ஆகியதை நம்பவே முடியவில்லை. ஆனால், கீதா கோவிந்தமின் 7 ஆண்டுகளுக்காக மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.