Enforcement Directorate freezes director Shankar’s assets

Enforcement Directorate freezes director Shankar’s assets


சென்னை,

எந்திரன், சிவாஜி உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் சங்கர். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். ஜென்டில்மேன் தொடங்கி கேம் சேஞ்சர் வரை அவரின் பிரமாண்டங்கள் தொடருகின்றன. அதேசமயம் அவரின் கடைசி இரண்டு படமான கமலின் ‘இந்தியன் 2’, ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ ஆகியவை தோல்வியை தழுவின.

இந்நிலையில் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில் முதற்கட்டமாக ரூ.10.11 கோடி மதிப்பிலான அவரின் 3 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த விஷயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *