Dulquer Salmaan, Prithviraj Sukumaran’s Houses Raided Over Luxury Car Tax Evasion | துல்கர், பிருத்விராஜ் வீட்டில் சுங்கத்துறையினர் சோதனை

கொச்சி,
கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோருக்கு கேரள மாநிலம் கொச்சியில் சொகுசு வீடுகள் உள்ளன. இந்நிலையில் தான் கொச்சியில் உள்ள இருவரின் வீடுகளிலும் திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பூட்டானில் உயர்ரக வாகனங்களை ஏலத்தில் குறைந்த விலையில் வாங்கி, அதனை இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்துள்ளனர். நடிகர்களை குறிவைத்து இந்த விற்பனை நடந்துள்ளதாக தெரிகிறது. இது மத்திய அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகள் உள்பட கேரளாவில் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேரளத்திற்குள் மட்டும் 20 கார்கள் கொண்டு வந்ததாகவும் அவற்றை நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்டோரும் வாங்கியதாகக் கூறப்படுகிறது
முறையான வரி செலுத்தாமல் வெளிநாட்டு சொகுசு கார்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்து அதனை விற்பனை செய்தது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது