Dress code in husband’s house – Actress Esha Deol | கணவர் வீட்டில் ஆடை கட்டுப்பாடு

Dress code in husband’s house – Actress Esha Deol | கணவர் வீட்டில் ஆடை கட்டுப்பாடு


பா.ஜ.க எம்.பியும், நடிகையுமான ஹேமாமாலினியின் மகள் இஷா தியோல் கடந்த 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள இஸ்கான் கோயிலில் பரத் தக்தானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஆண்டு இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரிந்துவிட்டனர். ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்த இஷா தியோல், பரத்தை திருமணம் செய்த பிறகு நடிப்பைக் கைவிட்டுவிட்டார். ஆனால் ஒரு சில திரைப்படங்களைத் தயாரித்தார்.

இஷா தியோல் புத்தகம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். புத்தகத்தில் தனது குடும்ப வாழ்க்கை குறித்துப் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், “திருமணத்திற்குப் பிறகுத் தனது வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறின. திருமணமாகி பரத் குடும்பத்தோடு வாழ ஆரம்பித்த பிறகு வீட்டில் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு நடமாட முடியவில்லை.

பரத் வீட்டுப்பெண்கள் சமையல் அறையின் ராணிகள் ஆவர். அவர்கள் தங்களது கணவர்களுக்காக சாப்பாட்டு டப்பாக்களை பார்சல் கட்டுவார்கள். ஆனால் எனது மாமியார் என்னிடம் சமையல் அறையில் வந்து வேலை செய்ய வேண்டும் என்று என்னை ஒருபோதும் நிர்ப்பந்தம் செய்தது கிடையாது. அதோடு ஒரு மருமகளாக நான் வீட்டு வேலையையும் செய்ய வேண்டும் என்று என்னிடம் கட்டாயப்படுத்தியது கிடையாது. எனது மாமியார் என்னைத் தனது மூன்றாவது மகனாக நடத்தினார்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

தனது கணவரைப் பிரிந்த பிறகு இஷா தியோல் அளித்திருந்த பேட்டியில், ”​கணவன் மனைவி இடையே ஏற்படும் மாற்றங்கள் அவர்களின் குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் ஒன்றாக இருங்கள். அதில் பிளவு ஏற்படக்கூடாது. இது பலருக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் முயற்சி செய்து பாருங்கள். முயற்சி செய்து கொண்டே இருங்கள். அந்த முயற்சியைக் கைவிடாதீர்கள்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *