Director Cheran’s post on the Karur tragedy

Director Cheran’s post on the Karur tragedy


கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசலை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு விஜய் வீடியோகாலில் பேசியுள்ளார். தனக்கு காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் நேரில் வந்து சந்திக்கிறேன் என கூறியிருக்கிறார் தவெக தலைவர் விஜய். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மொத்தமாக அழைத்து திருமண மண்டபத்தில் விஜய் சந்திக்க போவதாக ஒரு தகவல் வெளியானது.

இயக்குநர் சேரன், “உயிர் இழந்தவர்கள் குடும்பங்களை கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்லுவிங்களா சார். ரொம்ப தவறா இருக்கு விஜய். நேர்ல ஒவ்வொருவர் வீட்டுக்கு போறதுதான மரியாதை. அப்போதான உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கலங்கம் விலகும். அது முடியாதுன்னா எதுக்குமே உங்களால மக்களோட நிக்கமுடியாது” என எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதற்கு இயக்குநர் ஜான் மகேந்திரன், “மிகவும் முதிர்ச்சியற்ற மற்றும் நடைமுறைக்கு மாறான ஆலோசனை. அவர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றால் ஏற்படும் குழப்பத்தை கற்பனை செய்து பாருங்க” என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் தற்போது ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இதில் “ஒரு தலைவன் எப்பவும் என் பக்கத்துல வந்து எனக்காக நிப்பான்ற நம்பிக்கை உருவாக்கனும்.. முடியலைன்னா அத வளர்த்துக்கனும். ரசிகர் மன்றம் இருக்கவரை யாரும் கேட்கல. எங்களை எப்போ ஆளனும்னு வர்றிங்களோ அப்போதுதான் இந்த கேள்வி. நல்லது சொல்ல கூட இருங்க. தவறா சொல்லி ஏத்திவிட வேண்டாம்” என கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *