Director Bala explains the rumor that he attacked Mamita|மமிதா பைஜுவை தாக்கியதாக பரவிய வதந்தி

Director Bala explains the rumor that he attacked Mamita|மமிதா பைஜுவை தாக்கியதாக பரவிய வதந்தி


சென்னை,

தமிழ் சினிமாவில் முண்ணனி இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் வணங்கான். அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படப்பிடிப்பின்போது நடிகை மமிதா பைஜுவை இயக்குனர் பாலா தாக்கியதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது. இதனால்தான் மமிதா இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த தகவலுக்கு இயக்குனர் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

“மமிதா பைஜு எனக்கு மகள் மாதிரி. அவரை எப்படி நான் தாக்கி இருப்பேன். பாம்பேயில் இருந்து வந்த மேக்கப் கலைஞர் எனக்கு தெரியாமல் மமிதா பைஜுவிற்கு மேக்கப் போட்டு விட்டுவிட்டார். எனக்கு மேக்கப் போட்டால் பிடிக்காது என்று அவருக்கு தெரியவில்லை. மமிதாவிற்கும் சொல்ல தெரியவில்லை. அப்போது யார் மேக்கப் போட்டது என கேட்டு, கையைதான் ஓங்கினேன். அதன்பின் நான் மமிதா பைஜுவை அடித்துவிட்டேன் என செய்தி கிளம்பிவிட்டது.” என்றார்



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *