Director Ajaygnanamuthu wedding event | ‘டிமான்ட்டி காலனி’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்து திருமணம்

Director Ajaygnanamuthu wedding event | ‘டிமான்ட்டி காலனி’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்து திருமணம்


சென்னை,

கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி 2’ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியானது.

நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக், அதர்வா என பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து, ‘இமைக்கா நொடிகள்’ படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படமும் ஹிட் அடித்தது. அதன் பின்னர் விக்ரம் உடன் இணைந்து, ‘கோப்ரா’ படத்தினை எடுத்தார். இந்தப் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கடும் தோல்வியைச் சந்தித்தது. தற்போது ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது காதலியை பெற்றோர்களில் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. விஷயத்தைக் கேள்விப்பட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *