Dating apps and live-in relationships are eroding Indian culture – Kangana Ranaut | டேட்டிங் செயலி மற்றும் லிவ் இன் உறவுகள் இந்தியக் கலாசாரத்தை அரிக்கக்கூடியது

Dating apps and live-in relationships are eroding Indian culture – Kangana Ranaut | டேட்டிங் செயலி மற்றும் லிவ் இன் உறவுகள் இந்தியக் கலாசாரத்தை அரிக்கக்கூடியது


இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். எம்.பி., வாழ்க்கை இந்த அளவுக்கு அதிக வேலையுடையதாக இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என்றும், இந்த வாழ்க்கையைத் தான் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவில்லை என்றும் எம்.பி. பதவி குறித்து கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். பாலிவுட்டில் எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் கங்கனா ரனாவத் தற்போது ஆண் நடிகர்களைக் கடுமையாகச் சாடி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “பாலிவுட்டில் பெரும்பாலான ஆண் நடிகர்கள் அநாகரீகமானவர்கள். ஆனால் அவர்களால் நான் ஒரு போதும் பாதிக்கப்பட அனுமதித்ததில்லை. நான் பல நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால் இந்த நடிகர்கள் மிகவும் அநாகரீகமானவர்களாக இருக்கின்றனர் என்பதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது. பாலியல் தொல்லையை மட்டும் சொல்லவில்லை. படப்பிடிப்புக்கு மிகவும் தாமதமாக வருவார்கள். மோசமாக நடந்து கொள்வார்கள். நடிகைகளைக் கீழ்த்தரமாக நடத்துவார்கள், ஓரங்கட்டுவார்கள்.

டேட்டிங் செயலி மற்றும் லிவ் இன் உறவுகள் இந்தியக் கலாசாரத்தை அரிக்கக்கூடியது. டேட்டிங் செயலிகள் அப்படித்தான் இருக்கிறது. மேலும் இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்தும் நபர்களுடன் தொடர்புகொள்வதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தொழில் ரீதியாக, கல்வி ரீதியாக அல்லது குடும்ப அறிமுகம் மூலம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும்.நீங்கள் பணிபுரியும் அலுவலகங்கள், அல்லது நீங்கள் படிக்கும் கல்லூரிகள், அல்லது உங்கள் பெற்றோர் உங்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் பார்ட்னர்கள் போன்றவற்றில் நல்லவர்களைக் காண்பீர்கள். டேட்டிங் செயலியைப் பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் தோல்வியுற்றவர்கள். நீங்கள் அங்குத் தோல்வியுற்றவர்களை மட்டுமே காண்பீர்கள். லிவ்-இன் உறவுகள் பெண்களுக்குக் தீங்கு விளைவிக்கும்.

திருமணம் போன்ற சில குடும்ப அமைப்புகள் மாறாமல் இருக்க வேண்டும், நமது சமூகத்தில் திருமணங்கள் மிகவும் முக்கியம், மேலும் அது ஆண் தனது மனைவிக்கு விசுவாசமாக இருக்க அளிக்கும் வாக்குறுதியாகும். இப்போதெல்லாம் லிவ்-இன் உறவுகள் போன்ற புதிய யோசனைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். என் வாழ்நாள் முழுவதும், இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடும் மற்றவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவை பெண்களுக்கு ஏற்ற விஷயங்கள் அல்ல என்பதை நான் உங்களுக்குக் கூற முடியும். கருக்கலைப்பு செய்ய உங்களுக்கு யார் உதவப் போகிறார்கள்? நாளை லிவ்-இன் உறவின் போது நீங்கள் கர்ப்பமாகிவிட்டால், உங்களை யார் கவனித்துக் கொள்வார்கள். ஆண்கள் வேட்டைக்காரர்கள், அவர்கள் எந்தப் பெண்ணையும் கர்ப்பமாக்கிவிட்டு ஓடிவிட முடியும்” என்று தெரிவித்தார்.

2006ம் ஆண்டு கேங்க்ஸ்டர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனா ரனாவத் கடைசியாக எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் கங்கனா ரனாவத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 39 வயதாகும் கங்கனா ரனாவத் இது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *